பனமலை தாளகிரீசுவரர் ஆலயம்
தாளகிரீஸ்வரர் ஆலயம் | |
---|---|
பெயர் | |
பெயர்: | தாளகிரீஸ்வரர் ஆலயம் |
ஆங்கிலம்: | TALAGIRISWARAR |
அமைவிடம் | |
ஊர்: | பனமலை |
மாவட்டம்: | விழுப்புரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | தாளகிரீஸ்வரர் (சிவன்) |
தாயார்: | அஷ்டதளாம்பிகை |
தல விருட்சம்: | பனை |
தீர்த்தம்: | கங்கை |
சிறப்பு திருவிழாக்கள்: | சித்திரை மாதத்தில் 1 ஆம் தேதி படி திருவிழா |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | பல்லவர்கள் |
கல்வெட்டுகள்: | கோவில் வரலாறு பற்றி கூறும் கல்வெட்டுகள் |
வரலாறு | |
தொன்மை: | கி.பி 728 |
அமைத்தவர்: | இரண்டாம் நரசிம்ம பல்லவன் |
தாளகிரீஸ்வரர் ஆலயம் (Talagirisvara Temple) தமிழ்நாட்டிலுள்ள, விழுப்புரம் மாவட்டம், பனமலை என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோவில் ஆகும்.
அமைவிடம்
[தொகு]இவ்வாலயம் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து செஞ்சி செல்லும் சாலையில் உள்ள பனமலை கிராம பஞ்சாயத்தில் அமைந்துள்ளது. பனமலை, செஞ்சியிலிருந்து 23கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
வரலாறு
[தொகு]"தாள் " என்ற எழுது பனை மரத்தை குறிக்கும். பனை மரத்தை தலமரமாக கொண்ட சிவன் கோவில்களில் இதுவும் ஒன்று.[1] இராசசிம்மன் என அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்ம பல்லவன் பல்லவ மன்னர்களுள் ஒருவன். மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், கைலாசநாதர் கோயில், பனமலை தாளகிரீசுவரர் கோயில் இவ்வரசனால் கட்டப்பட்டைவை. [2]
பல்லவர் கால சுவர் ஓவியம்
[தொகு]இங்கு ஏழாம் நூற்றாண்டு கலையழகு மிக்க சுவர் ஓவியங்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. இக்கோயிலின் வடக்குத் துணைக் கருவறையில் இரு ஓவியங்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. இடது சுவரில் நடராசர் ஓவியம் ஏறக்குறைய அழிந்த நிலையில் உள்ளது. இதில் சிவன் வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மண்டியிட்டு, இடக் கையை மார்புக்கு குறுக்கே வீசி, ஆடுவது போல் உள்ளார். இதை சந்தியா பாணி என குறிப்பிடுகின்றனர். இதன் எதிர்ச் சுவரில் நடராசரைப் பார்த்தபடி இருக்கும் பார்வதி வரையப்பட்டிருக்கிறார். பார்வதி இடது காலை மடித்துச் சுவரில் சாய்ந்து ஒற்றைக் காலில் நிற்பதுபோல் சித்தரிக்கபட்டுள்ளார். தலைக்கு மேலே ஒரு சிவப்பு குடை உள்ளது. பார்வதியின் தலை மஞ்சள் நிற கிரீட மகுடம் அழகு படுத்துகிறது. காதில் காதணி உள்ளது. நெற்றியில் சிவப்பு திலகம் உள்ளது. கழுத்தில் சுவடி, கண்டிகை போன்ற அணிகலன்கள் அழகூட்டுகின்றன. கணுக்கால் வரை நீண்டுள்ளதாக சிவப்புப் புடவை சிறு பூக்களோடு உள்ளது. கால்களை கொலுசு அழகூட்டுகிறது.[3]
-
கோவில் வரலாறு பற்றி கூறும் இருமொழி(தமிழ், ஆங்கிலம்) பலகை.
-
ஏழாம் நூற்றாண்டு பல்லவர் கால எழில்மிகு சுவர் ஓவியத்தின் (பார்வதி) ஒரு பகுதி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=1096&ncat=20&Print=1
- ↑ http://ngm.nationalgeographic.com/2008/01/india-ancient-art/map-interactive
- ↑ Srinivasan, P.R (1982). The Indian temple, art and architecture. University of Mysore: Prasaranga.
வெளி இணைப்புகள்
[தொகு]- பனைமலை சிவன் கோவில், காணொளி